Saturday, December 28, 2024
HomeIndiaமோடி தலைமையிலான இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜனாதிபதி பாராட்டு; உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பு.

மோடி தலைமையிலான இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜனாதிபதி பாராட்டு; உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பு.

– விமான, கப்பல் சேவைகள் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலு

ஜனாதிபதி ரணில் – பிரதமர் மோடி சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

– திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்து தென்னிந்தியாவில் இருந்து எரிபொருள் குழாய்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் (21) சந்தித்தார்.

இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக (20) இந்தியா சென்ற அவர் இச்சந்திப்பை மேற்கொண்டிருந்தார். இதன்போது! பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மேம்படுத்தப்பட்ட இந்தியாவின் ஆச்சரியமளிக்கும் வகையிலான பொருளாதார, உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தொடர்பில் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சி அயல் நாடுகள் மற்றும் இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கையின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின், ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ள இந்தியாவிற்கான தனது முதல் விஜயத்தின் போது, அண்மைக்கால வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் கடினமான காலங்களில், இந்தியா வழங்கிய உறுதியான ஆதரவுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசாங்கம், இந்திய மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கையில் அனைவரும் பொருளாதார மறுமலர்ச்சி, நிலையான அபிவிருத்தி, நீதி ஆகியவற்றை அடைவதற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நல்லிணக்கம், அதிகாரப் பகிர்வுக்கான விரிவான திட்டத்துடன் இணக்கத்தை எட்டுவதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்தார்.

குறித்த முயற்சிகள் தொடர்பில் பிரதமர் மோடி தனது ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments