Home Cinema பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் இவர்களா?

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் இவர்களா?

0

தமிழ் சின்னத்திரையில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் உள்ளது, அதில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடையில் மவுசு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் அமைந்து வருகிறது. அப்படி இதுவரை இதில் கலந்துகொண்ட பிரபலங்கள் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள்.

கடந்த 6வது சீசனில் விக்ரமன் மற்றும் அசீம் இருவரில் ஓருவர் வெற்றியாளர் என வர மக்கள் பலரும் விக்ரமன் தான் வருவார் என எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் அசீம் தான் 6வது சீசன் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது ஜுன் மாதம் தொடங்கியதில் இருந்து பிக்பாஸ் 7வது சீசன் குறித்த பேச்சுகள் அடிபடுகின்றன. புதிய சீசன் போட்டியாளர்கள் இவர்கள் தான் என ஒரு லிஸ்ட் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இதோ அந்த லிஸ்ட்,

  • தொகுப்பாளினி ஜாக்குலின்
  • நடிகர் பப்லு
  • நடிகர் தினேஷ்
  • நடிகை ரேகா நாயர்
  • ஓட்டுனர் ஷர்மிளா
  • நடன இயக்குனர் ஸ்ரீதர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version