சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தனுஷ் இருவரும் திருமணம் ஆகி 18 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது சுமூகமாக பிரிந்து இருக்கின்றனர்.
அவர்கள் சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை, சண்டை காரணமாக பிரிந்து மட்டுமே இருக்கின்றனர் என தனுஷின் அப்பா கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் நடுவில் சண்டை ஏற்பட்டு இருப்பது அறிந்து ரஜினி தனுஷை சந்திக்க அழைத்து இருக்கிறார். ஆனால் தனுஷ் அவரை சந்திக்க செல்வதை தவிர்த்துவிட்டார் என தகவல் இப்போது பரவி வருகிறது.
சூப்பர்ஸ்டார் மீது அதிகம் மரியாதை வைத்திருக்கும் தனுஷ் தான் எதுவும் தவறாக பேசிவிடக்கூடாது என்பதற்காக தான் சந்திப்பை தவிர்த்திருக்கிறார் என கிசுகிசுக்கப்படுகிறது.