வவுனியா பறநாட்டாங்கல் பகுதியிலே லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (21) அதிகாலை முருகண்டியில் இருந்து வவுனியா நோக்கி வந்த லொறி பறநட்டகல் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா ஓமந்தை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.