ஜப்பான் கடல் சார் தற்காப்புப் படையின் சமிடரே கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பல் சிறிலங்கா கடற்படையின் மரபுகளுக்கு அமைய வரவேற்கப்பட்டுள்ளது.
ஜப்பான் கடல் சார் தற்காப்புப் படையின் சமிடரே கப்பல் 151 மீற்றர் கொண்டதுடன், 195 பேர் கொண்ட குழு உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
குறித்த கப்பலின் இலங்கைக்கான விஜயத்தின்போது கப்பலின் கட்டளை அதிகாரி, தளபதி ஒகுமுரா கென்ஜி உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், இரண்டு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில், சிறிலங்கா கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பணியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அத்துடன் கப்பல் இலங்கையில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் அதன் பணியாளர்கள் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லவுள்ளனர்.
குறித்த கப்பல் எதிர்வரும் ஜூலை 29 திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.