Home India மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறை – முக்கிய குற்றவாளி கைது.

மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறை – முக்கிய குற்றவாளி கைது.

0

மணிப்பூரில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியாகி வைரலானது.

இந்த வீடியோவை கண்ட மனித உரிமை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் 2 மாதத்துக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கிடையே, இந்த வீடியோவை ஒளிபரப்ப தொலைக்காட்சிகளுக்கும், சமூக ஊடகங்களுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து மணிப்பூரின் சுராசந்த்பூரில் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஹேராதாஸ் (32), என்பவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version