2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் 90 வீதம் நிறைவு பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பரீட்சையில் ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றியுள்ள மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நிறைவுபெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமான பொறியியல் தொழில்நுட்பம் செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவு பெறள்ளதாகவும் 13,000 பரீட்சாத்திகளுக்காக 48 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்விப் பொது தராதர உயர் தரத்துடன் சம்பந்தமான உயிர் பல்வகைமை தொழில்நுட்ப பாடத்திற்கான செயன்முறை பரீட்சை எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை 77 மத்திய நிலையங்களில் நடைபெறும் என்றும் அதற்காக 15,000 பேர் பரீட்சைக்குத் போற்றுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதி எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.