Sunday, December 29, 2024
HomeSrilankaமதிய உணவுக்காகச் சென்ற இளைஞன் சுட்டுக்கொலை.

மதிய உணவுக்காகச் சென்ற இளைஞன் சுட்டுக்கொலை.

இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் காலி – இக்கடுவை பிரதேசத்தில் இன்று (19.07.2023) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அப்பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஆர்.பிரசன்ன என்ற நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் குறித்த இளைஞர், மதிய உணவுக்காக மோட்டார் சைக்கிளில் வீடு சென்று திரும்பும் போது வீதியில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் வந்த இருவர் கைத்துப்பாக்கியால் அவர் மீது சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞரின் சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த குறித்த நபர், பாதாளக் குழுக்களுடன் தொடர்பில் இருந்தவர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments