கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்திற்கு உரிய வடமுனை வீரநகர் பிரதேசத்திற்கு உட்பட்ட நிலப்பரப்பு இந்த குடும்பி மலை எவ்வளவு பெரிய மலை இங்கு காலம் காலமாக முருகன் வழிபாடு செய்து வந்தது அனைவரும் அறிந்ததே.
இதே குடும்பி மலைக்கு அருகே நெளியகல்மலை ( நெடுகல்மலை ) என அழைக்கப்படும் மலைக்குன்று அந்த குடும்பிமலை தனை விட பெரிய பரப்பளவு நிலத்தை கொண்ட குன்று என அறியாதவர் பலர். முறுத்தானை பொண்டுகச்சேனை வடமுனை பேரளாவழி போன்ற ஊரிற்கு இடையில் வழியாக இந்த நெளியகல்மலை காணப்படுகிறது.. 210 A/1 வடமுனை எனும் கிராம சேவக பிரிவிற்கு உரித்தானது.இந்த மலையை கிரான் ஊடாகவும் பார்க்கலாம். அல்லது வெலிக்கந்தை ஊடாக சென்று கல்லிச்சை வடமுனை ஊடாகவும் செல்ல முடியும்.
1942 க்கு முதல் இருந்தே இந்த நெளியகல்மலை யில் முருகன் வழிபாடுகள் நடைபெற்றன . வளைந்து வளைந்து நெளிந்து நெளிந்து செல்லும் இவ் மலைக்கு நெளியகல்மலை என பெயர் வரவும் காரணம் என வரலாறு சொல்கிறது.
யுத்தம் காலத்தில் இங்கு வழிபாடுகள் எல்லாம் தடைப் பெற்று போயின. பிறகு இங்கு வசித்த வடமுனை கிராம மக்கள் யுத்தம் நிமித்தம் பல தடவைகள் இடம் பெயர்ந்தனர். கடைசியாக இவர்கள் 2008 ம் ஆண்டு மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இதன் பிறகும் 2011 க்கு பிறகு வடமுனை மக்கள் மீண்டும் நெளியகல் மலை க்கு சென்று முருகனை வணங்கி வந்தனர் ..
இப்படி ஆதிகாலம் தொட்டே வழிபாடு செய்து வந்த நெளியகல் மலை தனை 2021 ம் ஆண்டு இலங்கை தொல் பொருள் திணைக்களத்தினால் பார்வை செய்து ஆய்வு செய்ய ஆரம்பித்தனர்.
மிகப்பெரிய மலையான இந்த நெளியகல் மலை தனை ஆட்சி செய்த அரச ஆவணங்கள் புராதன காலத்தில் பயன் படுத்தப்பட்ட பாத்திரங்கள் எல்லாம் எடுத்து சேமித்தனர்.. இங்கு நிறைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன அவை தமிழ் மொழிதனை ஒத்தவகையில் அமைந்துள்ளது. இலங்கை தொல் பொருள் திணைக்களத்தினால் ஆய்வுகள் செய்யப்பட்ட பிறகு அங்கு பௌத்த பிக்குகள் வருகை தந்தார்கள். பௌத்த பிக்குகள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினால் சொல்லப்பட்ட விடயம் உங்களுடைய முருகன் வழிபாட்டை நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம். நீங்கள் எப்போதும் சென்று வழிபடலாம் என்றே சொன்னார்கள்.
202 1ம் ஆண்டு இலங்கை இராணுவம் கூட பார்வையிட வந்தார்கள். 2021 ம் ஆண்டு மார்கழி மாதம் அவர்கள் தங்களுடைய விகாரை தனை கட்ட ஆரம்பித்ததாக தெரிய வருகிறது. இப்போது அந்த இடத்திற்கு ஒருவரையும் பார்வையிட அனுமதிப்பதில்லை. இப்போது இந்த நெளியகல் மலை பகுதியில் விகாரை கட்டி கொண்டு உள்ளார்கள். இதனை கிரான் பிரதேச செயலாளரான திரு. ராஜ் பாபு அவரிடம் அறிவித்த போதும் இது ஆளுனர் ஜனாதிபதி மற்றும் அரசியல் வாதிகள் முன்நின்று மேற்கொள்ளும் போது நான் ஒன்றும் செய்ய முடியாது என கூறினார்.
குடும்பிமலை தனை விட பெரிய பரப்பளவு கொண்ட நெளியகல் மலை தனை பொலன்னறுவை க்கு உரியதாக புதிய யாப்பு எழுதுவது எப்படி நியாயம்.
மட்டக்களப்பு மாவட்டத்தோடு உரித்தான மனம்பிட்டி ;முத்துக்கல், வெலிக்கந்தை போன்ற பிரதேசங்கள் ஏற்கனவே யுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு பொலன்னறுவை மாவட்டத்திற்கு உள்வாங்கப்பட்டது இங்கு யாவரும் அறிந்ததே.
இதேபோல் இந்த நெளிய கல் மலை பொலன்னறுவை மாவட்டத்திற்கு உள் வாங்கப்பட்டால் குடும்பிமலை யும் பறிப்போகும் அதனை அண்மித்த ஊர்களும் பறிப்போகும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரிய வளமான இந்த எல்லை கிராமத்தையும் அதனை அண்டிய காடுகள் மற்றும் மலைகளை பாதுகாப்பது யாரின் பொறுப்பு.