கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி, நேற்று அதிகாலை பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரின் உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் எடுத்துச் செல்லப்பட்டது. திதுவனந்தபுரத்தில் உள்ள அவரின் ‘புதுப்பள்ளி’ வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சாலை மார்க்கமாக கோட்டயத்தில் உள்ள அவரது பூர்வீக வீடுக்கு பூத உடல் கொண்டுசெல்லப்படுகிறது.
இதன் காரணமாக, எம்.சி சாலையில் லாரிகள் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் செல்லக்கூடாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கோட்டயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உம்மன்சாண்டி உடல் வைக்கப்படுகிறது.
நாளை இறுதிச்சடங்கு நடக்கிறது. உம்மன் சாண்டி உடலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
உம்மன் சாண்டி மறைவுக்கு கேரள ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஒப்பற்ற மக்கள் தலைவராக இருந்தார் எனத் தெரிவித்துள்ளார்.