Home World US News 1 வயது குழந்தையை சுட்டுக்கொன்ற 3 வயது குழந்தை..

1 வயது குழந்தையை சுட்டுக்கொன்ற 3 வயது குழந்தை..

0

அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகானத்தின் சான் டியாகோ கவுண்டியில் உள்ள பால்புரூக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு 3 வயது குழந்தை ஒன்று வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிய போது தவறுதலாக வீட்டிலிருந்த ஒரு வயது சகோதரியின் தலைப்பகுதியில் சுட்டு கொன்றுள்ளது.

நடந்த இச்சம்பவம் குறித்து அமெரிக்க காவல்துறை கூறுகையில்,”காவல் நிலையத்திற்கு குழந்தை போன் செய்து உள்ளது. அழைப்பிற்கு பதிலளித்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 3 வயது குழந்தை தவறுதலாக 1 வயது சகோதரியின் தலையில் சுட்டுள்ளது தெரியவந்தது.

துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் சுயநினைவின்றி இருந்த குழந்தையை மீட்டு பலோமர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் எற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்” என்று காவல்துறையினர் கூறி உள்ளனர்.

மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை கண்டெடுத்து உள்ளனர். இச்சம்பவம் குறித்து குழந்தைகளின் நலன்கருதி பெயர் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version