இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ் மக்கள் சார்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் எழுதிய கடிதம் நேற்று (17) இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் புதுடில்லியில் எதிர்வரும் 21ஆம் திகதி உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெறவுள்ள நிலையில், மோடிக்குச் சம்பந்தன் அவசரமாகக் கடிதம் எழுதியுள்ளார்.
நான்கு பக்கங்களில் ஆங்கிலத்தில் கையளிக்கப்பட்ட அந்தக் கடிதத்தின் பிரதிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.