எல்ல வெல்லவாய பிரதான வீதியில் இன்று காலை (18) இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த வீதியினூடாக உமா ஓயா திட்டத்தின் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் உறுதிபடுத்தியுள்ளார்.