போலந்து தலைநகர் வார்சாவில் இருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரிசினோ கிராமத்தில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம், அங்குள்ள வயல்வெளி பகுதியில் விழுந்தது. அங்கிருந்த வீடு மீது மோதி நொறுங்கியது.
இந்த விபத்தில் விமானி உள்பட 5 பேர் பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.