குருந்தூர்மலை ஆதி சிவன் வழிபாடுகள் தடுக்கப்பட்டமை தொடர்பாகவும், நீதிமன்றக் கட்டளையைப் பிக்குகளுடன் இணைந்து பொலிஸார் உதாசீனம் செய்தமைக்கு எதிராகவும் ஒட்டுமொத்தத் தமிழர்களும், சைவர்களும் எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டுமென அகில இலங்கை சைவமகாசபையின் பொதுச் செயலர் மருத்துவக் கலாநிதி ப.நந்தகுமார் வலியுறுத்தினார்.
குருந்தூர் ஆதி சிவன் மலையில் வழிபாடுகளுக்கு அரச இயந்திரத்தாலும், மாற்று மதத்தவர்களாலும் மிக மிலேச்சத்தனமான முறையில் இடையூறு விளைவிக்கப்படுவது, பொங்கல் பானை உட்பட சைவ வழிபாடுகள் பொலிஸாராலேயே மிதித்து மானபங்கப்படுத்தப்படுவது நிறுத்தப்படும் வரை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கத் தமிழ்ச் சைவ அமைப்புக்கள் கோர வேண்டுமெனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.