Home World கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகல்…!!

கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகல்…!!

0

உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்கும் நோக்கத்துடன் ‘கருங்கடல் தானிய ஒப்பந்தம்’எற்படுத்தப்பட்டது. தானியங்களை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடு உக்ரைன். உலகின் பல நாடுகள் உக்ரைனின் தானியங்களை பெரிதும் நம்பியிருக்கின்றன. ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனின் துறைமுகங்கள் ரஷியாவால் கைப்பற்றப்பட்டது. இதனால் தானிய ஏற்றுமதி குறைந்து மிக பெரிய உணவு நெருக்கடி உருவாகியது.

இதனால் கடந்த வருடம் ஜூலை மாதம் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் துருக்கியின் முயற்சியால் ரஷியா-உக்ரைன் மோதலால் தேக்கி வைக்கப்பட்ட உக்ரேனிய தானியங்களை பாதுகாப்பாக ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதன் மூலம் உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்கும் நோக்கத்துடன் “கருங்கடல் தானிய ஒப்பந்தம்”எற்படுத்தப்பட்டது. அந்த உடன்படிக்கையில் சில நிபந்தனைகளுடன் ரஷியா பங்கேற்றது.

இந்த ஒப்பந்தம் காலாவதியாகி மீண்டும் 2 முறை புதுப்பிக்கப்பட்டது. கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என்று பல மாதங்களாக ரஷியா கூறி வந்தது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று காலாவதியாக இருந்தது. ரஷியா தொடர்பான கருங்கடல் நிபந்தனைகள் இதுவரை செயல்படுத்தப்படவில்லை, எனவே அதிலிருந்து விலகுவதாக அறிவித்து உள்ளது.

ரஷியாவின் சொந்த விவசாய ஏற்றுமதிகளுக்கு உதவும் வகையில் பணம் செலுத்துதல், காப்பீடு மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றை அனுமதிக்கும் ஒரு இணையான ஒப்பந்தத்தை, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் தடுத்து வைத்திருப்பதாகவும், இதனால் ரஷியாவிற்கு பெரும் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் ரஷியா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. “ஒப்பந்தங்கள் நிறைவேறியவுடன், மீன்டும் கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் பங்கேற்போம்’ என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

ரஷியாவின் இந்த முடிவிற்கு,’ரஷியா- கிரிமியா இடையே உள்ள பாலத்தின் மீது இரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், உக்ரைன் மீது குற்றம் சாட்டியதற்கும் தொடர்பில்லாதது’ என்று அவர் மேலும் கூறி உள்ளார். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்பே, ஜனாதிபதி புதின் இந்த முடிவை அறிவித்தார்” என்று பெஸ்கோவ் கூறி உள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version