Home World US News இனி என்றும் இளமைதான் அமெரிக்க விஞ்ஞானிகளின் அசத்தலான கண்டுபிடிப்பு.

இனி என்றும் இளமைதான் அமெரிக்க விஞ்ஞானிகளின் அசத்தலான கண்டுபிடிப்பு.

0

அமெரிக்காவின் ஹார்வர்டில் உள்ள ஆய்வாளர்கள் வயதாவதைத் தடுக்கும் ஒரு புது வித மருந்துகள் காக்டெய்லைக் கண்டுபிடித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கெமிக்கல் மூலம் வயதாவதை மாற்றியமைக்கும் முறை” என்ற தலைப்பில் இந்த ஆய்வு குறித்த விரிவான ஆய்வுகள் ஏஜிங் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மொத்தம் 6 கெமிக்கல் காக்டெய்ல்களைக் கண்டுபிடித்துள்ளது.

இது மனித தோலின் செல்கள் வயதாவதை நன்கு மாற்றியமைத்தாக கூறப்படுகிறது.

ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர் டேவிட் சின்க்ளேர் இந்த செயல்முறையைத் தனது ட்விட்டரில் விளக்கியுள்ளார்.

அதில் அவர்,

“மரபணு சிகிச்சை மூலம் வயதை மாற்றியமைப்பது சாத்தியம் என்பதை நாங்கள் முன்பே விளக்கியுள்ளோம்.

இப்போது வயதாவதைத் தடுக்க இரசாயன காக்டெய்லை உருவாக்கியுள்ளோம்.

இது குறைந்த செலவிலேயே நமது உடலை எப்போதும் இளமையாக வைத்திருக்கும் வாய்ப்பை வழங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதில் ஒவ்வொரு கெமிக்கல் காக்டெய்லிலும் 5 மற்றும் 7 கெமிக்கல்கள் இருக்கிறது.

இதில் இருக்கும் பல கெமிக்கல்கள் உடல் மற்றும் மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் கெமிக்கலாகும்.

வயதாகும் செயல்முறை தடுத்து அதை மாற்றியமைக்கும் செயல்முறையைக் கண்டுபிடிக்க 3 ஆண்டுகளுக்கு மேலானதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உயிரணுக்களைப் புத்துயிர் அளிக்கும் மூலக்கூறுகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version