தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை 7 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை தொடங்கினர். பொன்முடி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சைதாப்பேட்டை வீட்டில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மேல் விசாரணைக்காக காரில் அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.