எல் நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தான் வரலாற்றிலேயே உலகில் அதிக வெப்பம் பதிவான மாதம் என நாசா தெரிவித்துள்ளது.
ஜூன் 2023-க்கான உலகளாவிய சராசரி வெப்பநிலை 1951 முதல் 1980 ஜூன் வரையிலான சராசரியை விட 1.07 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக நாசா கூறுகிறது. இது, மனித நடவடிக்கைகளின் விளைவாக, முக்கியமாக கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளின் விளைவாக, அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலையின் ஒரு பகுதி என நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.