Home World சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் கைதாகி, ஜாமீனில் விடுவிப்பு – CPIB விசாரணை!

சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் கைதாகி, ஜாமீனில் விடுவிப்பு – CPIB விசாரணை!

0

சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட விவகாரம் சிங்கப்பூரில் பேசுபொருளாகியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரின் அமைச்சரவையில் வர்த்தகம், தொழில்துறை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எஸ்.ஈஸ்வரன்.

இவர் மீது ஊழல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, பிரதமர் லீ சியென் லூங், எஸ்.ஈஸ்வரனை கடந்த வார இறுதியில் விடுப்பில் செல்லக் கேட்டுக்கொண்டார்.
இது சிங்கப்பூரில் விவாதப் பொருளானது.

இந்த நிலையில், அந்த நாட்டில் ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் புலனாய்வுக் குழுவான Corrupt Practices Investigation Bureau (CPIB) சிங்கப்பூரின் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். ஈஸ்வரனை செவ்வாய்கிழமை கைதுசெய்தது.

அதே தினத்தில் சிங்கப்பூரின் பெரும் தொழிலதிபரான ஓங் பெங் செங்கும் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட அன்றே இருவருக்கும் சிபிஐபி ஜாமீனும் வழங்கி விடுவித்தது. ஒரே தினத்தில் இருபெரும் முக்கியஸ்தர்கள் கைதுசெய்யப்பட்டது சிங்கப்பூர் அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. எனினும் இருவரின் வழக்கும், அதில் தொடர்பு உள்ளதா என்னும் தகவலும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், சிங்கப்பூரின் சட்டத்தின்படி கைதுசெய்யப்பட்டவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும். ஆனால், தொழிலதிபர் ஓங் பெங் செங் சிபிஐபி-யிடம் வெளிநாடு சென்றுவருவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதனால், சில சட்ட விதிமுறைகளின் படி அவருக்குக்கு மட்டும் வெளிநாடு செல்வதற்கு புலனாய்வு குழு ஒப்புதல் அளித்திருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version