Home Srilanka கொழும்பு துறைமுக நகரில்செயற்கை கடற்கரை திறப்பு.

கொழும்பு துறைமுக நகரில்செயற்கை கடற்கரை திறப்பு.

0

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட செயற்கை கடற்கரை இன்று (15) திறந்து வைக்கப்பட்டது.

இன்று முதல் இந்த செயற்கை கடற்கரையை நாட்டு மக்களுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, செயற்கைக் கடற்கரையில் நீந்த முடியும் என்பதோடு நீர் விளையாட்டிலும் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கடற்கரை சுமார் மூன்றரை கிலோமீட்டர் நீளம் கொண்டுள்ளது.

இந்த செயற்கை கடற்கரைக்கு மேலதிகமாக அதற்கு அருகில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உணவுகளுடன் கூடிய உணவு விற்பனை வளாகமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version