ஆஸ்திரேலியாவில் 23 வயது இந்திய மாணவர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீக்கியர்களுக்கு தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் அமைப்பினர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள இந்து கோயில்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் கோயில்களில் எழுதி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தங்கி படிக்கும் இந்தியாவை சேர்ந்த மாணவர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
சிட்னியின் மேற்கு புறநகர் பகுதியான மெர்ரிலேண்டில் தங்கி படித்து வரும் 23 வயது இந்திய மாணவர், பகுதிநேர ஓட்டுநராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை காரில் அமர்ந்திருந்தபோது, அவரது காரை சூழ்ந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் காரை அடித்து நொறுக்கி மாணவரை வௌியே இழுத்து இரும்புக் கம்பிகளால் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து வந்த நியூசவுத்வேல்ஸ் பொலிசார் தாக்கப்பட்ட மாணவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.