சந்திரயான் – 3 திட்டம் ஆண்களால் வழிநடத்தப்பட்டாலும் இதற்கு பின்னால் அதிகளவில் பெண்களே பணிபுரிகிறார்கள் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சந்திரயான் -3 திட்டத்தில் பொறியாளர்கள்/ விஞ்ஞானிகள் என மொத்தம் 54 பெண்கள் உள்ளனர்.
சந்திரயான்-3 விண்கலத்துக்கான பரிசோதனைகள், சோதனை ஓட்டங்கள், எரிபொருள் நிரப்பும் பணி என அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த விண்கலத்தை சுமந்து செல்லும் எல்விஎம்3எம்4 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட் டவுன் நேற்று பிற்பகல் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம், இன்று பிற்பகல் 2.35 மணியளவில் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
`சந்திரயான்-3 விண்கலம், நிலவு மற்றும் பிரபஞ்சத்தின் அதிசயங்களை வெளிக்கொண்டு வர உள்ளது.
சந்திரயான் -3 விண்கலத்தின் சமிக்ஞைகள், நிலவை ஒருபடி மேலும் நெருங்கும். நிலவைப் பற்றிய ஆராய்ச்சியில் மற்ற நாடுகளை விட இந்தியா பின்தங்கவில்லை என்பதை நிரூபித்துக் காட்டும்.
சந்திரயான் -3ல் உள்ள தனித்துவமான அம்சங்கள், நிலவில் இருந்து நிலவை மட்டும் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், நிலவிலிருந்து பூமியையும் கண்காணித்து, விண்வெளி துறையில் சாதித்துள்ள பெருமைமிக்க நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும்’ என மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.