நாடளாவிய ரீதியில் நேற்று (13) வியாழக்கிழமை முதல் மூன்று தினங்களும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்குரிய தினங்களாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அமுல்படுத்தியுள்ளது.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் நோக்கில் மாவட்ட செயலக வளாகத்தில் சிரமதானம் இன்று(14) காலை 9.00மணிக்கு மேற்கொள்ளப்பட்டது.
மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் குறித்த சிரமதான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.