சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி நாளை திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மாவீரன் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், இயக்குனர் மிஸ்கின் வில்லனாக நடிக்க யோகி பாபு, சுனில், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி படத்தில் ஒலிக்கும் குரலாக விஜய் சேதுபதியும் மாவீரனில் இணைந்துள்ளார்.
மாபெரும் எதிர்பார்ப்பில் நாளை வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விமர்சனத்தை நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘ மாவீரன் சக்ஸஸ்’ என தம்ஸ் அப் காட்டி பதிவு செய்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஒலிக்கும் குரலாக நடித்துள்ள விஜய் சேதுபதி படத்தை முழுமையாக பார்த்துவிட்டு, ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு போன் கால் செய்து ‘ படம் சூப்பர்’ என பாராட்டி பேசியுள்ளாராம். இதை மேடையில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
இவர்கள் இருவரின் விமர்சனத்தின்படி கண்டிப்பாக மாவீரன் மாபெரும் வெற்றியடையுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.