தழிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு பா.ஜனதா தேசிய தலைவரான ஜே.பி. நட்டாவை அவர் சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றி இருவரும் கலந்தாலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருகிற 28-ந் தேதி அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்குகிறார். இது தொடர்பாகவும் இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.