முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கைவேலி பகுதியில் அரச காணியில் தற்காலிகமாக கொட்டகை அமைத்து வாழ்ந்துவந்த ஏழைக் குடும்பத்தின் கொட்டகையினை பிடிங்கி எறிந்து தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த அராஜக வேலையினை இந்தப் பகுதிக்கு பொறுப்பான வனவளத் திணைக்களத்தின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது மண்ணெண்ணையினையும், கத்தியினையும் வனவளத்திணைக்களத்தினர் எடுத்துச் சென்றதாகவும் அதனை பறித்து பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாகவும் அறியக்கிடைக்கின்றது.
இந்தப் பகுதியில் சட்டவிரோமான முறையில் சுமார் ஒன்பது குடும்பங்கள் காணிகளை பிடித்துள்ளார்கள் என வனவள திணைக்களத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குற்றம் யார் பக்கம் இருப்பினும் பிரதேச செயலகம் உண்டு அதனை தொடர்ப்பு கொண்டு மக்களின் பிரச்சினைகளை கேட்டறியாது அவர்கள் மூலம் ஒழுங்கு முறையில் கட்டளை பிறப்பித்து வெளியேற்றாது இவ்வாறு அடாத்தான முறையில் காட்டுமிராண்டித் தனமாக மக்களை வெளியேற்றியுள்ளமை மிகவும் கண்டனத்துக்குரியது.
இன்று வரை புதுக்குடியிருப்பு மேற்கு கைவேலியில் இருப்பதற்கு காணி இல்லாதவர்களை ஏன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் கண்டுகொள்ளவில்லை, இவற்றை தெளிவுபடுத்தி பிரச்சினையை தீர்க்கும் முழுப்பொறுப்பும் பிரதேசசெயலகத்திற்கு உண்டு.