உலகம் முழுவதும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் இந்த படத்தை எப்படியாவது பெரிய ஹிட் படமாக ஆக்க வேண்டும் என்று பம்பரமாக சுற்றி ப்ரோமோஷன் செய்து வருகின்றார்.
நேற்று மலேசியாவில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சிவகார்த்திகேயன் மற்றும் மாவீரன் டீம் சென்றுள்ளனர்.
அங்கு சென்ற இடத்தில் பல பிரச்சனைகள் அரங்கேறியுள்ளது. அதில் மேலும் ஒரு பிரச்சனையாக ஷங்கர் மனைவி தன் மகள் அதிதி-காக மலேசியா சென்றுள்ளார்.
அவருக்கு விமானத்தில் சென்று வர, எகனாமி க்ளாஸ் டிக்கெட் போட்டு கொடுத்துள்ளார்களாம். இது அவருக்கு கோபத்தை வர வைத்தாலும், தன் மகளுக்காக பொறுத்துக்கொண்டு சென்றிருப்பார் என்று சமூக வலைத்தளத்தில் பேசி வருகின்றனர்.