Home Srilanka பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான கார்.

பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான கார்.

0

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி 10 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக கெப்பிட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்றைய தினம் (12.07.2023) காலை நிகழ்ந்துள்ளது.

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் ரெண்டபொல சந்தியிலிருந்து அம்பேவெல வரையான பிரதான வீதியில், அம்பேவெல நோக்கிச் சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான கார் வீதியை விட்டு விலகி, சுமார் 10 அடி பள்ளத்தில் விழுந்ததில் கார் பலத்த சேதமடைந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் வீதி
விபத்தின் போது, காரில் பயணித்த வைத்தியர் மற்றும் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் சிறு காயங்களுக்குள்ளானதோடு, கார் கவிழ்ந்து அருகில் உள்ள மரத்தில் மோதியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

ரெண்ட்பொல – அம்பேவெல பட்டிப்பொல ஊடாக ஹொடன்தன்ன வரை செல்லும் பிரதான வீதியானது நாளாந்தம் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் வீதி என கெப்பிட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வீதியில் குறுகலான இடங்கள் காணப்படுவதனால் அவ்விடங்களின் ஊடாக வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் செலுத்துமாறு கெப்பிட்டிபொல பொலிஸார் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version