பிரான்ஸ் கடற்படைக் கப்பலான லோரெய்ன் நேற்று(11) காலை உத்தியோகபூர்வ பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
142.20 மீற்றர் நீளமுடைய லோரெய்ன் என்று அழைக்கப்படும் இக்கப்பலானது பிரான்ஸ் நாட்டின் வான் – பாதுகாப்பு மற்றும் பல தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் போர்க்கப்பல்களில் ஒன்றாகும்.
இக்கப்பலானது 154 குழு உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுகின்றது, அதுமாத்திரமன்றி இப் போர்க்கப்பலின் கட்டளை தளபதியாக சேவியர் பாகோட் விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த கப்பலின் கட்டளை அதிகாரி நேற்று (11) சிறிலங்காவின் மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், மேற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்தார்.
மேலும், அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலம் வரை கப்பலின் பணியாளர்கள் இலங்கையிலுள்ள சில சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை கப்பலுடன் பயிற்சியில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
லோரெய்ன் கப்பலானது எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.