ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஜோடி தங்களுடைய பிரிவு குறித்து அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டனர். இந்த பிரிவுக்கு பின் இருவரும் அவரவர் பாதையில் பயணித்து வருகிறார்கள்.
என்னதான் பிரிந்துவிட்டாலும், தங்களுடைய குழந்தைகளை நல்லபடியாக கவனித்து வருகிறார்கள். அவ்வப்போது அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிடுகிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இளம் நடிகர் ஒருவருடன் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளிவந்தது. ஆனால், அந்த இளம் நடிகர் யார் என இதுவரை தெரியவரவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணம் செய்யப்போவது இல்லையாம். மேலும் அவர் இளம் நடிகரை காதலிப்பதாக சொல்லும் செய்தியும் பொய் என கூறப்படுகிறது.
இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இல்லை என்றும், அவர் தற்போது முழு கவனத்தை தன்னுடைய படத்தில் தான் வைத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இரண்டாம் திருமணம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.