ஆப்கானிஸ்தான் – வங்காளதேச அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்க முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 89 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதனையடுத்து ஓமர்சாய் – முஜீப் உர் ரஹ்மான் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் ஆடிய ஓமர்சாய் அரை சதம் அடித்து அசத்தினார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய முஜீப் உர் ரஹ்மான் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக ஓமர்சாய் 56 ரன்கள் எடுத்தார். வங்காளதேச அணி தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.