Home Srilanka யாழ் பிரபல பாடசாலை மாணவி உயிரை மாய்த்தார்!!

யாழ் பிரபல பாடசாலை மாணவி உயிரை மாய்த்தார்!!

0

டிக் டொக் காதலால் திருமணம் செய்து கொண்ட சுண்ணாகம் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் பபிசாலினி வயது 19 என்ற
பாடசாலை மாணவி தற்கொலைக்கு முயன்ற நிலையில்,காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண வலயத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த குறித்த மாணவி

க.பொ.த உயர்தரத்தை இடை நடுவில் கைவிட்டு சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை டிக் டொக்கில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சில மாதங்கள் சீதுவைப் பிரதேசத்தில் கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் முரண்பாடுகள் காரணமாக தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

இந்நிலையில் கணவன் தொலைபேசி ஊடாக தொந்தரவு கொடுத்ததாகவும் மீண்டும் சீதுவைக்கு வருமாறும்..

இல்லாவிட்டால் காணொளிகள் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவேன் எனவும் மனைவியை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மன விரக்தி அடைந்த மனைவி வீட்டில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் உறவினர்களால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version