நைஜீரியாவில் கொடிய சாலை விபத்துகள் அடிக்கடி பதிவாகின்றன, பெரும்பாலும் அதிக சுமை, மோசமான சாலை நிலைமைகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் ஏற்படுகிறது. தென்மேற்கு நைஜீரியாவின் லாகோஸில் நேற்று முன்தினம் பயணிகள் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது, மோவா நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து டிரக் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி பேருந்தில் இருந்த சுமார் 20 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 20 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து, லாகோஸ்-படக்ரி விரைவுச் சாலை வழியாக மோவோ நகருக்கு அருகே மணல் ஏற்றப்பட்ட டிரக் மீது மோதியதாக லாகோஸில் செய்தியாளர்களிடம் லாஸ்ட்மா செய்தித் தொடர்பாளர் தாவோபிக் அடேபாயோ தெரிவித்தார்.
இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், மணல் ஏற்றப்பட்ட டிப்பர் லாரியை முந்திச் செல்ல முற்பட்டபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. வாகன ஓட்டிகள், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றும், இதனால் தேவையில்லாத உயிர் மற்றும் உடைமை இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.