முல்லைத்தீவு மாவட்டம், மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் மர்மநபர்கள் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தூக்கத்தில் இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே சாவடைந்துள்ளார்.
நேற்று நள்ளிரவு வீட்டின் வாசல் கதவைத் திறந்து கொண்டு உள்நுழைந்த மர்மநபர்கள், அறை ஒன்றில் உறக்கத்தில் இருந்த இளைஞர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
உயிரிழந்த நபர் ஒரு கொலைச் சம்பவத்தில் சந்தேகநபராகக் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்புதான் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.