Home India தொண்டை வலியுடன் ஆஸ்பத்திரிக்கு படையெடுக்கும் நோயாளிகள்.

தொண்டை வலியுடன் ஆஸ்பத்திரிக்கு படையெடுக்கும் நோயாளிகள்.

0

தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பருவ காலத்தில் பரவும் வழக்கமான வைரஸ் பாதிப்புதான் இது என்றாலும், முன் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம் என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பகல் வேளைகளில் அதீத வெப்பம் மற்றும் மாலை வேளைகளில் மழைப்பொழிவு என தமிழகத்தின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக பருவ நிலையில் மாற்றங்கள் காணப்படுகின்றன. இதன் எதிர்விளைவாக குழந்தைகள், முதியவர்கள், பெண்களுக்கு கடுமையான தொண்டை வலி, உடல் அசதி, காய்ச்சல் மற்றும் சளி பாதிப்புகள் ஏற்படுவதாகத் தெரிகிறது.

அதன் தொடா்ச்சியாக மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக வரு ரின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படத் தொடங்கி 3 வாரங்கள் மட்டுமே ஆன நிலையில், தற்போது காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்று பரவி வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடா்பாக நோய்த் தொற்றியல் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டா் அப்துல் கபூா் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதேவேளையில், சூழலியல் மாற்றங்களால் பரவும் வைரஸ் தொற்றுகள் ஆங்காங்கே பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அனைத்து வயதினருக்கும் தொண்டை வலி, உடல் சோர்வு மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. பெரும்பாலானோர் அதற்கு டாக்டர்களை நாடுவதில்லை. 3-ல் இருந்து 5 நாட்களுக்குள் அந்த பாதிப்புகள் குணமாகிவிடுவதே அதற்கு காரணம். எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவா்களுக்கு தீவிர தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது. அவா்களுக்கு பாராசிட்டமால் மற்றும் வைட்டமின் மருந்துகளையே பெரும்பாலும் பரிந்துரைக்கிறோம்.

வழக்கமான வைரஸ் தொற்று இது என்பதால் ஆன்டிபயோடிக், ஆன்டி வைரல் மருந்துகள் இதற்கு தேவையில்லை. வெது வெதுப்பான நீரில் உப்பு அல்லது கிருமித் தொற்று நீக்க மருந்துகளைக் கலந்து கொப்பளித்தால் போதுமானது. காய்ச்சிய தண்ணீரைப் குடிப்பதும், கைகளை சோப்பால் அடிக்கடி கழுவுவதும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version