Home India Sports இங்கிலாந்து அணியின் வெற்றி நீடிக்கும்: பென் ஸ்டோக்ஸ்.

இங்கிலாந்து அணியின் வெற்றி நீடிக்கும்: பென் ஸ்டோக்ஸ்.

0

இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்னும், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 237 ரன்னும் எடுத்தன. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 237 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 251 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்னை எடுத்து வெற்றி பெற்றது. முதல் டெஸ்டில் 2 விக்கெட்டிலும், 2-வது டெஸ்டில் 43 ரன்னிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது. 5 போட்டிக் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணியின் வெற்றி குறித்து கேப்டன் பென்ஸ்டோக்ஸ் கூறியதாவது:- இங்கிலாந்து அணியின் இந்த வெற்றி தொடக்கம்தான். இனிவரும் டெஸ்டுகளிலும் வெற்றி தொடரும். முதல் இரண்டு போட்டியில் தோற்றப் பிறகு 3-வது டெஸ்ட் முக்கியமானது. இதனால் நெருக்கடியில் பெற்ற இந்த வெற்றி சிறப்பானது. எங்கள் அணி வீரர்களின் செயல்பாடு மிக சிறப்பாக இருந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் வருகிற 19-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version