Home Srilanka சரத் வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் நாளை போராட்டம்!

சரத் வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து முல்லைத்தீவில் சட்டத்தரணிகள் நாளை போராட்டம்!

0

தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்த கருத்தைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் இன்று (10) ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேலும் குறித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (11) முற்பகல் 10.30 மணியளவில் முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் அடையாளக் கண்டனப் போராட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கண்டனப் போராடடத்தில் வடக்கு மாகாண இதர சட்டத்தரணிகள் சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version