பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – வட்டக்கொடையில் இருந்து மடக்கும்புர பகுதியை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று துனுகெதெனிய, கிரிடிகெட்டிய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (09.07.2023) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற போது பஸ்ஸில் சுமார் 26 பேர் பயணித்துள்ளதுடன், இதில் காயமடைந்த 21 பேரை கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.