Home Srilanka விபரீத முடிவினால் உயிரிழந்த பாடசாலை மாணவி.

விபரீத முடிவினால் உயிரிழந்த பாடசாலை மாணவி.

0

அனுராதபுரம் – கலென்பிடுனுவெவ பொலிஸ் பிரிவில் விபரீத முடிவினால் உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணத்திற்கான காரணத்தை பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி பாடசாலைக்கு வீட்டில் உடைந்து காணப்பட்ட தொலைபேசியை பெற்றோருக்கு தெரியாமல் திருத்தி,சிம் அட்டையொன்றினையும் வாங்கி செலுத்தி இளைஞரொருவருக்கு பாடசாலையில் வைத்து கதைத்து வந்துள்ளார்.

இதனை அவதானித்த அதிபர் உடனடியாக மாணவியை எச்சரித்து தொலைபேசியை பறித்து, நாளைய தினம் பாடசாலைக்கு பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார்.இதன் காரணமாக மனம் உடைந்த மாணவி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தினை அருந்தி தவறான முடிவை எடுத்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவியின் மரணம் தொடர்பில் தந்தையான எஸ்.ஜி.சிரிசேன வாக்குமூலம் வழங்கியுள்ளதுடன், மாணவியின் தற்கொலைக்கு தொலைபேசி பாவனையே காரணம் என்றும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை போன்று எதிர்காலத்தில் எந்தவொரு தந்தையும் பிள்ளையை இழக்கக்கூடாது எனவும்,பிள்ளைகளிடமிருந்து தொலைபேசி பாவனையை முற்றான அகற்றுமாறும் ஏனைய பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version