அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச் சேர்ந்த மெல்பா மெபேன் என்ற 90 வயதை எட்டிய மூதாட்டியே 74 ஆண்டுகள் விடுப்பே எடுக்காமல் வேலைக்கு தொடர்ந்து சென்ற பெண் என்ற பெருமையை தனதாக்கியுள்ளார்.
மேல்பா தனக்கு 16 வயதாக இருந்தபோது தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
அந்த நிறுவனத்தின் பேரங்காடியில் (shopping Mall) லிஃப்ட் ஒபரேட்டர் (lift Operator) பணியில் சேர்ந்த அவர் பின்னர் சிறிது காலம் கழித்து அதே நிறுவனத்திலேயே ஆடை மற்றும் அழகு சாதன பொருட்கள் பிரிவில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.
இந்த பிரிவில் அவர் 74 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் வேலை செய்திருக்கிறார் என்று குறிப்பிடப்படுகிறது.
இத்தனை ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் வேலை செய்த மேல்பா தான் 90 வயதை எட்டியதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 30ம் திகதி தொடக்கம் தான் வேலைக்கு சென்று பணியாற்றும் சேவைக்கு ஓய்வினை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவருடன் கலந்துரையாடுகையில், “நான் எனது வீட்டில் இருந்த காலத்தை விட அதிகளவான காலத்தை எனது நிறுவனத்தில் தான் கழித்திருக்கிறேன், இப்படி நீண்ட காலம் வேலையிலேயே நேரத்தை செலவழித்த எனக்கு இப்போது வீட்டில் தனியாக இருப்பது மிகவும் சிரமமாக உள்ளது” என்று கூறியிருந்தார்.
இவர் பற்றி தனியார் நிறுவன அதிகாரிகள் கூறுகையில்,
மேல்பா மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒரு சிறந்த ஊழியர் மாத்திரமல்லாமல் அவர் தான் வேலை செய்த அனைத்து துறைகளிலும் தனக்கென தனிச்சிறப்பான அடையாளத்தையும் பதித்திருக்கிறார் என அவரின் சிறப்புக்களை கூறியுள்ளனர்.