எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல் பற்றிக் டிரஞ்சன் தனது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த உமாமகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் செயலாளராக நியமிக்கப்படவுள்ள நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.