Home India ரூ.7.5 கோடி சொத்து; மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் – உலகின் பணக்கார யாசகர்!

ரூ.7.5 கோடி சொத்து; மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் – உலகின் பணக்கார யாசகர்!

0

தன்னால் சரியாகப் படிக்க முடியாவிட்டாலும், தன்னுடைய குழந்தைகள் இரண்டு பேரையும் கான்வென்ட் பள்ளியில் படிக்க வைத்திருக்கிறார். அதோடு பணக்காரர்கள் வசிக்கக்கூடிய பரேல் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், பரத் ஜெயின் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

உலகில் யாசகர்கள் எங்கும் நிரம்பியிருக்கிறார்கள். உடல் ஊனமுற்றவர்கள், முடியாதவர்கள்தான் யாசகம் செய்கிறார்கள் என்றால், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தும், சிலர் யாசகம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். இந்தியாவிலிருந்து சிலர் வெளிநாடுகளுக்கும் சென்று யாசகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டின் பொருளாதார தலைநகரமான மும்பையில், உலகின் மிகவும் பணக்கார யாசகர் வாழ்ந்து வருகிறார். மும்பைக்கு வரும் யாரும் முயன்றால் கோடீஸ்வரராகலாம் என்பதற்கு பரத் ஜெயின் என்ற யாசகர், ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார். சில யாசகர்கள், யாசகம் செய்து அதை அப்படியே கையிலோ அல்லது தாங்கள் தங்கும் இடத்திலோ வைத்திருப்பது வழக்கம். ஆனால் பரத் ஜெயின் யாசகம் செய்தாலும், திருமணம் செய்துகொண்டு குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

தன்னால் சரியாகப் படிக்க முடியாவிட்டாலும், தன்னுடைய குழந்தைகள் இரண்டு பேரையும் கான்வென்ட் பள்ளியில் படிக்க வைத்திருக்கிறார். அதோடு மும்பையில் மிகவும் பணக்காரர்கள் வசிக்கக்கூடிய பரேல் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பரத் ஜெயின் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். அடுக்குமாடிக் குடியிருப்பில் பரத்துக்கு இரண்டு வீடுகள் இருக்கிறதாம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version