மகரம் என்றால் வலிமையான கடல் வீடு என பொருள்!
மகர ராசிக்காரர்கள் உள்ளத்தில் உறுதியோடு எதையும் சாதிக்கக்கூடியவர்கள்.
ராசிகளிலேயே அதிக புகழ் இருந்தாலும் எளிமையும்,பண்பும் கொண்டவர்கள் மகர ராசியினர்.இவர்களைப் போல் சூழலுக்கேற்ப பொருந்திப் போகக்கூடிய, சகிப்புத்தன்மை நிறைந்த மனிதர்களை வேறெங்கும் பார்க்க முடியாது.
கலகலப்பானவர்களாக இருந்தாலும் எப்பொழுதும் ஆழ்ந்த சிந்தனையுடனே இருப்பார்கள். கள்ளம் கபடமில்லாத உள்ளம் கொண்ட இவர்கள் கருத்துகளை கூறும்போது அழுத்தம் திருத்தமாக பேசுவார்கள்.
பேச்சில் முன்கோபமும், உறுதியும் அவ்வப்போது வெளிப்படும். தன்னை நம்பி வந்தவர்கள் நண்பர்களானாலும் சரி விரோதிகளானாலும் சரி ஆதரித்து ஆறுதல் கூறி உதவி செய்யும் உயர்ந்த பண்பு கொண்டவர்கள்.
இவர்கள் மனதிலும் புதுப்புது எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். எவ்வளவு சோதனைகள் வந்தாலும் சோர்வு அடையமாட்டார்கள்.
வாழ்க்கையில் தோல்வி அடைந்து அதலபாதாளத்துக்குச் சென்றாலும், மறுபடியும் வீறுகொண்டு எழுந்து நிற்பார்கள். இவர்களின் ராசிக்கு அதிபதியான சனி பகவான் இரக்க சுபாவத்தை அதிகம் கொடுக்கும் கிரகம் என்பதால் எதிலும் மனிதநேயத்தோடு செயல்பட விரும்புவார்கள்.
மகர ராசிக்காரர்கள் மிகவும் ஈகை குணம் கொண்வர்கள். எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்த மாட்டார்கள். மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டவும் மாட்டார்கள்.
மகர ராசிகார்களுக்கு குடும்பத்தின் மேல் அதிக பாசம் இருக்கும். பெற்றவர்கள், பிள்ளைகள் மேல் அதிக அன்பு கொண்டிருப்பார்கள். தான் கஷ்டபட்டாலும் மற்றவர்கள் மனம் கோணாத அளவுக்கு நடந்து கொள்வார்கள். இவர்கள் கடுமையான உழைப்பாளிகள். இவர்கள் அவ்வளவு எளிதில் யாருக்கும் வாக்கு கொடுக்க மாட்டார்கள்.
வாக்கு கொடுத்துவிட்டால் அதை எப்படியாவது முடித்து கொடுத்து விடுவார்கள். மகர ராசிகார்கள் செய்யும் தொழிலை தெய்வமாக கருதுவார்கள். எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் முன்னேற்றமும், வெற்றியும் பெறுவார்கள். இவர்களுக்கு வாழ்வின் முற்பகுதியை விட பிற்பகுதி தான் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும்.
மகர ராசியினர் சனிக்கிழமை தோறும் பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறையாவது சனீஸ்வர அம்சம் கொண்ட திருப்பதி திருமலை ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாளை வணங்க வேண்டும்.
சனிக்கிழமைகளில் நவகிரகங்களில் சனி பகவானுக்கு நெய் அல்லது விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
முருக பெருமானின் உச்ச ராசியாக இருப்பதால் செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வணங்கி வருவதால் இல்லற வாழ்க்கை, பூர்வீக சொத்து, நிலம் போன்ற விடயங்களில் பல நன்மைகள் ஏற்படும்.
கருப்பு நிற ஆடைகளை மகர ராசியினர் எப்போதும் அணியக்கூடாது. சொந்த வீடு அல்லது வாடகை வீடு கிழக்கு திசை பார்த்தவாறு அமைத்து கொள்வது உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை தரும்.
ஏழைகளுக்கு அன்னதானமும், கோயில்களுக்கு வெல்லம், தேன், அரிசி போன்றவற்றை தானம் தருவதால் உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.