Friday, December 27, 2024
HomeIndiaகோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை- எப்.ஐ.ஆர். விவரம் வெளியீடு.

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை- எப்.ஐ.ஆர். விவரம் வெளியீடு.

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டது தொடர்பான எப்.ஐ.ஆர். வெளியிடப்பட்டுள்ளது. டி.ஐ.ஜி. தற்கொலை குறித்து தகவல்களை ஆயுதப்படை முதல்நிலைக் காவலர் ரவிச்சந்திரன் பதிவு செய்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு: டி.ஐ.ஜி.யின் முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தேன். கோவை சரகத்திற்கு வந்ததிலிருந்து சரியான தூக்கம் வரவில்லை என்று டி.ஐ.ஜி. மாத்திரை எடுத்துக்கொள்வார். DSR பார்ப்பதற்காக 7ம் தேதி காலை 6.30 மணிக்கு டி.ஐ.ஜி. வந்தார்.

அலுவலில் இருந்த காவலர் ரவிவர்மாவிடம் டி.ஐ.ஜி. விஜயகுமார் குடிப்பதற்கு பால் கேட்டார். காலை 6.40 மணியளவில் பாலை குடித்துவிட்டு எனது அறைக்கு டி.ஐ.ஜி. வந்து DSR-ஐ பார்த்தார். எனது துப்பாக்கியை கையில் எடுத்த டி.ஐ.ஜி. எப்படி பயன்படுத்துவது என்று கேட்டுக்கொண்டே வெளியில் சென்றார்.

நான் வெளியே வருவதற்குள் வெடிச்சத்தம் கேட்டது. தலையில் ரத்த காயத்துடன் மல்லாந்த நிலையில் டி.ஐ.ஜி. கீழே விழுந்து கிடந்தார். கோவை அரசு மருத்துவமனைக்கு டி.ஐ.ஜி.-ஐ கொண்டு சென்றோம். டி.ஐ.ஜி ஏற்கனவே இறந்துவிட்டாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறினர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments