நெதர்லாந்தில் கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமராக மார்க் ருடி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், புலம் பெயர்ந்தோரின் புகலிடக் கோரிக்கை தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு தொடர்ந்தது. நெதர்லாந்தில் ஆட்சி அமைத்து ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் அரசு புலம்பெயர்ந்தோரின் புகலிடக் கோரிக்கைகள் கட்டுப்படுத்த முயன்றது.
ஆனால், இதற்கு கூட்டணிக் கட்சிகள் இடையே எதிர்ப்பு நிலவி வந்தது. இதுதொடர்பான சட்டவரைவு நெதர்லாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கும் கட்சிக்குள் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில், அவசர அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திய பிரதமர் ரூட்டே நேற்று மாலை செய்தியாளர் சந்திப்பின்போது தான் ராஜினாமா செய்வதை உறுதி செய்தார்.