Home World Canada News கனடாவில் இலங்கை இளைஞர் உயிரிழப்பு.

கனடாவில் இலங்கை இளைஞர் உயிரிழப்பு.

0

கனடா – ஒன்றாரியோ, கஷேசெவான் பகுதியில் அல்பானி ஆற்றில் இடம்பெற்ற படகு விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் அவசர மருத்துவ உதவியாளராக பணியான்றி வந்த சிவசக்திராஜா அர்ச்சனன் என்ற இளைஞர் காணாமல் போயிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதன் கிழமை மாலை 5 மணியளவில் காணாமல் போன இளைஞரின் உடல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்டவரை குடும்பத்தினர் அடையாளம் கண்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் கோண்டாவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version