கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கோவை சரக டிஐஜி விஜயகுமார் மரணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.