Home World Canada News கனடாவில் இடம் பெற்று வரும் புதிய மோசடி.

கனடாவில் இடம் பெற்று வரும் புதிய மோசடி.

0

கனடாவின் கல்கரி பகுதியில் இடம்பெற்று வரும் மோசடி குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போலீசார் என்ற போர்வையில் குறித்த கும்பல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

போலீஸ் அதிகாரிகள் என்ற போர்வையில் கிரிப்டோ கரன்சி மோசடியில் இந்த நபர்கள் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறி அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக பணம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

டிஜிட்டல் கரன்சி வகைகளில் மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலும் இந்த மோசடிக்காரர்கள் நாடகமாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அடையாளம் தெரியாத நபர்களிடம் நம்பி பணத்தை கொடுக்க வேண்டாம் என போலீசாருக்கு கோரியுள்ளனர்.

போலீசார் என கூறிக் கொள்ளும் நபர்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 உத்தியோகத்தர்  ஆள் அடையாளத்தை உறுதி செய்து கொள்ள வேண்டுமாயின் 403-266-1234  என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version