சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்காளதேச அணி வீரர் தமிம் இக்பால் அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போதே கண்ணீர் விட்டு அழுதார்.
பிப்ரவரி 2007-ல் தமிம் தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். மேலும் வங்காளதேசத்திற்காக அதிக ஒருநாள் ரன்கள் (8313) மற்றும் சதங்கள் (14) அடித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மாவுக்கு அடுத்தபடியாக, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் இக்பால் ஆவார்.